அழுத்தும் புதுவரவு.....பேபி புளு தாய்மை அவளது எல்லா எதிர்பார்ப்புகளும் நொருங்கிப்போன ஒருநாள்.... பாலுக்காக வீரிட்டு அழும் குழந்தையை அவள் தேள் கொட்டியவளாய் திகைத்து நோக்குகிறாள்..... அவள் தாய்மையின் சுமை தலையில் கணக்க தடுமாற்றம் கொண்டு சமநிலை தவறி கீழே கீழே ஏகுகிறாள்.... உறக்கம் தொலைந்துபோக நாட்காட்டி நலிந்துபோக ஒத்தாசையற்றுப்போக ஈஸ்திரோஜன், புரோதெஸ்ரோன் தைரொட் இன்னும்பிற இறங்கிப்போக இவளுடலின் தலை சுற்றுச் சுழல்கிறது....... வேண்டாத ஒன்று கழுத்தை தெரிப்பதாக வாழ்க்கை கசப்பதாக வன்முறையில் வழிதேட ஏவலாகிறாள்..... விஞ்ஞானத்தின் விபரீதத்தை புரிந்துகொள்ளா உள்ளங்கள் சரமாரியாக வசவுகளை பொழிகின்றன....
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நேற்றிரவு தூறலாக தொடங்கிய மழை தொடர்ந்து அடித்து பொழிந்தது.... யனனலை திறந்து திரையை விலக்கியபோது குழந்தையொன்று காகித கப்பல் செய்து ஓடும் நீரில் விட்டு மகிழ்கிறது...... குழந்தையாய் என்றும் இருந்திருந்தால் குழப்பம் என்றும் இல்லையோ என்று மனம் தேம்புகிறது.... மூன்று நாட்கள் முன்பு உறவுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்த ஒருநாளில் அவளை மலடி என ஓரங்கட்டியது தேம்பியழும் குழந்தையாக்கிறது..... பெண்குறியில் விழுந்த விந்துக்கள் விருத்தியற்றிருந்தாலும் சூலகமே சூனியக்காரியாகிறது.... ஒரு மனிதனுக்கு இரண்டு நீதிகள்.......
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண் என்னும்..... ஊர் உறங்கிக்கொண்டிருந்த ஒரு இரவில் அனந்தலற்று புரண்டு படுக்கிறாள் சுடலைகுருவி ஒன்று வீட்டின் மேலாய் கீச்சிட்டு செல்கிறது..... முந்தநாள் தந்தை இறந்து கிடக்கிறார் அவள் கதறியழுகிறாள் கண்திறந்து பார்க்கிறார் அப்பா கனவில்..... எல்லாமே எல்லாமே மனதைக் குடைகிறது அடுத்த நாளுக்கான சேவைப்பொழுது விரைந்து வருகிறது...... மணமாகி இரு திங்கள்தான் உண்டாகி விட்டாயா என தொடுக்கும் கேள்வி எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது..... ஏவாளின் கையில் அப்பிள் போல் பொருளாகிப்போன மணவாழ்க்கை பொருளற்று போகிறது....... பெண் என்ற படைப்பு இன்னும் எத்தனை காலம் விடியலுக்காய் காத்திருப்பதோ.....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருமணம்.... இருமனம் ஒருமனமாவது திருமணம் என்கின்றாள் அம்மா.... செல்லாமாய் வளர்த்த கிளியை இறக்கை வெட்டி பறக்க விடுவது என்கின்றார் அப்பா.... அடங்காத சுதந்திர காற்றை கட்டுக்குள் போட்டு அடங்க வைப்பது என்கின்றார் அண்ணா... நித்தியத்தில் இவர்கள் இப்படித்தான் கனவுகளை நிரப்பிக்கொண்டிருக்கையில் அவள் செப்புகிறாள் பெட்டியை கழட்டி விடும் புகைவண்டி போல் காதலித்தவளை கழட்டிவிட்டவனும் காசுக்காக மட்டுமல்ல சேர்ந்து வாழ்ந்துவிட்டு கெளரவத்திற்காக நம்பவைத்து தொலைந்தவனும் முற்போக்கு முகமூடியை அணிந்தவனும் ஆணாதிக்க அதிகாரத்தை அரவணைத்தவனும் என் நிராகரிப்ப வரிசையில் நீண்டிருக்கையில்...... உங்கள் வரையறைகளை தாண்டி எங்கேயாவது தேடிப்பாருங்கள் மனிதியை மதிக்கும் மானிடனை கண்டுபிடித்தால் கொண்டுவாருங்கள் நான் அச்சமின்றி அச்சமின்றி ஆமோதிப்பதை பரிசீலனை செய்கிறேன்..... ப
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மாற்றங்கள் மாற்றங்கள் மறுபிறப்பெடுக்கின்றன மறுப்பவை மீண்டும் மர்ணிக்கின்றன சித்தாந்தத்தால் சிறகு உடைக்கப்பட்டவள் ஏவாள் அதனால்தானே அவள் உடலும் உறுப்பும் போகமாய் இன்னும் மறுபிறப்பெடுத்த ஏவாள் மறுதளித்தாள் நான் மனிதன் என சேத்துப் பன்னி ஒன்னு சேறடிப்பதாய் எண்ணி மார்புக்கச்சை பற்றி பேசி மீண்டும் மர்ணிக்கிறது ஏவாள் உரத்துச் சொன்னாள் எனது உடல் எனது உடை என
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நீதி மறுக்கப்பட்டவர்கள் நாங்கள் பறத்தலை வேண்டி நிற்கும் உருமாற்றம் காணாத கூட்(ண்)டு புழுக்களே நாங்கள்.... நாங்கள் பெண்களாக பிறப்பெடுக்க வில்லை சிலைகளாக உருவமைக்கப்பட்டோம் சித்தாந்தம் பழுத்தகனி தொடுத்தவர்க்கு-ஆனால் விழுந்திருப்பது பெண்களுமே இரவல் விழிகளில் இருட்டில் நீ இருந்த காலம் தொலைந்து போகும் விரைந்து வா பெண்ணே முகர்ந்து பார் சுதந்திரக் காற்றை நீதி மறுக்கப்பட்டவர்கள் நாங்கள்......
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் By - Chandra Nalliah 1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக உலக வர்த்தகத்தை விஸ்தரிக்க விரும்பியே இந்த ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என ஊகிக்கலாம். ஆனால் அது இலங்கையின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் என்ற வெளித்தோற்றமாகவே சொல்லப்படுகிறது. சீனா இலங்கையுடன் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்வாறு சீனாக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட திட்டங்கள் 1. ஹம்பாந்தோட்ட துறைமுக அபிவிருத்தி ( Hambantota port development project ) 2. ஹம்பாந்தோட்ட சர்வதேச விமான நிலையம் ( Mattala - Hambantota international Airport ) 3. கொழும்பு துறைமுக நகரம் ( Colombo port city ) 4. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ( Colombo - Katunayaka Expressway project ) 5. Southern Expressw...