திருமணம்....


இருமனம்

ஒருமனமாவது

திருமணம் என்கின்றாள்

அம்மா....


செல்லாமாய்

வளர்த்த கிளியை

இறக்கை வெட்டி

பறக்க விடுவது

என்கின்றார்

அப்பா....


அடங்காத 

சுதந்திர காற்றை

கட்டுக்குள் போட்டு

அடங்க வைப்பது

என்கின்றார்

அண்ணா...


நித்தியத்தில் இவர்கள்

இப்படித்தான் கனவுகளை

நிரப்பிக்கொண்டிருக்கையில்


அவள் 

செப்புகிறாள்

பெட்டியை கழட்டி விடும்

புகைவண்டி போல்

காதலித்தவளை

கழட்டிவிட்டவனும்

காசுக்காக மட்டுமல்ல

சேர்ந்து வாழ்ந்துவிட்டு

கெளரவத்திற்காக

நம்பவைத்து தொலைந்தவனும்

முற்போக்கு முகமூடியை

அணிந்தவனும்

ஆணாதிக்க அதிகாரத்தை

அரவணைத்தவனும் 

என்

நிராகரிப்ப வரிசையில்

நீண்டிருக்கையில்......


உங்கள்

வரையறைகளை தாண்டி

எங்கேயாவது

தேடிப்பாருங்கள்

மனிதியை மதிக்கும்

மானிடனை கண்டுபிடித்தால்

கொண்டுவாருங்கள்

நான்

அச்சமின்றி அச்சமின்றி

ஆமோதிப்பதை

பரிசீலனை செய்கிறேன்.....








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்