நேற்றிரவு
தூறலாக தொடங்கிய
மழை தொடர்ந்து
அடித்து பொழிந்தது....
யனனலை திறந்து
திரையை விலக்கியபோது
குழந்தையொன்று
காகித கப்பல் செய்து
ஓடும் நீரில்
விட்டு மகிழ்கிறது......
குழந்தையாய் என்றும்
இருந்திருந்தால்
குழப்பம் என்றும் இல்லையோ
என்று மனம் தேம்புகிறது....
மூன்று நாட்கள்
முன்பு
உறவுகள் எல்லாம்
ஒன்றுசேர்ந்த
ஒருநாளில் அவளை
மலடி என ஓரங்கட்டியது
தேம்பியழும் குழந்தையாக்கிறது.....
பெண்குறியில் விழுந்த
விந்துக்கள்
விருத்தியற்றிருந்தாலும்
சூலகமே சூனியக்காரியாகிறது....
ஒரு
மனிதனுக்கு
இரண்டு நீதிகள்.......
கருத்துகள்
கருத்துரையிடுக