The Mirabal Sisters 

                 மிராபெல் சகோதரிகள்


" November 25 th, International Day for the Elimination of Violence against Women"

            



நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு கொண்டாடுவதன் வரலாற்று பின்னணியை நோக்குவது சிறப்பாக அமையும். 

Mirabal சகோதரிகள் டொமிகன் மகாணத்தில் சால்செடோவில் பிறந்தார்கள். டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25ல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபெல் லினிடாஸ் ட்ருஜிவோவின்  (Rafael Leonidar Trujillo) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவும் இவர்கள் குரல் கொடுத்தவர்கள். ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று அழைக்கப்பட்ட மிராபெல் சகோதரிகள் உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் அடையாள சின்னமாக மாறினார்கள்.


Mirabal sisters  என அழைக்கப்பட்ட Patria Mercedes Mirabal Reyes, Bélgica Adela Mirabal Reyes, María Argentina Minerva Mirabal Reyes, Antonia María Teresa Mirabal Reyes என்ற நான்கு சகோதரிகளும்  டொமினியன் குடியரசில் (Dominica republican ) வாழ்ந்த Enrique Mirabal Fernandez and Mercedes Comilo என்ற பெற்றோரின் குழந்தைகள் ஆவர். இவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் அந்நாட்டின் சர்வதிகார ஆட்சியினை கண்டு கவலையுற்று

அதனை எதிர்த்து செயற்பட்டார்கள். இவர்களில் இரண்டாவது சகோதரியாகிய Belgica Adela Mirabal Reyes அரசியல் ஆர்வம் குறைந்தவராக இருந்தார். மிகுதி மூவரும் ( Minerva, Patria, Maria Teresa ) ஒற்றுமைப்பட்ட கருத்துக்களை கொண்டிருந்தார்கள். மிராபெல் சகோதரிகள் அன்றைய சர்வதிகார ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவருவதில் ஆர்வமாக இருந்தார்கள். ஜூன் 14 ( Fourteen of June ) எனும் இயக்கத்தை உருவாக்கினர். அக்குழுவின்  உள்ளே அவர்கள் பட்டாம்பூச்சிகள் என அழைக்கப்பட்டனர். சகோதரிகள் பல தடவை சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்கள். இவர்களது துணைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


நவம்பர் 25 ல் Mirabal சகோதரிகள் ( Minerva Mirabal, Patria, Maria Teresa )

சென்று கொண்டிருந்த வாகனம் இரகசிய காவல் அதிகாரிகளினால் (secret police officers)  நிறுத்தப்பட்டு மிக மோசமாக தாக்கப்பட்டார்கள். பின்னர் இவர்கள் கொல்லப்பட்டு இவர்களது வாகனம் பள்ளத்தாக்கில் வீசப்பட்டது. இந்த கொடூரமான செயலை விபத்து என உருவகப்படுத்தி மக்களை நம்பவைக்க முனைந்தார்கள். ஆனால் இந்தப் படுகொலைகள் நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சகோதரிகளின் கொலைகள் சொந்த நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தியது. இவ்வாறு மக்கள்  மத்தியில் உருவான விழிப்புணர்வானது நாளடைவில் 1961இல் Rafael Leonidar Trujillo இன் படுகொலைக்கு வழிவகுத்தது


Mirabal சகோதரிகளின் நினைவாகவே 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் வருடம்தோறும் நவம்பர் 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்றியது. நவம்பர் 25ம் திகதி Mirabal சகோதரிகளின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலின வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி முடிவடைகின்றது.


Mirabal சகோதரிகளின் உடல்கள் சொந்த வீட்டில் புதைக்கப்பட்டுள்ளனர்.  டொமினியன் குடியரசில் உண்மையின் அடையாளமாக மிராபெல் சகோதரிகள் கல்லறையிலிருந்து தங்கள் கைகளை வலுவாக வெளியுயர்த்தினர் என சொல்லப்படுகிறது. அவர்களின் நினைவாக ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. அங்கு ஒரு நூலகமும், புத்தக்க்கடையும், நினைவு பரிசுகள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. மிராபெல் சகோதரிகளின் கதை ‘இன் தி டைம்ஸ் ஆப் பட்டபிளை’ (In the Time of the Butterflies) என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது. மிராபெல் சகோதரிகள் டொமினிகன் குடியரசில் நீதியான அரசை உருவாக்குவதற்கு தமது வாழ்க்கையை அர்பணித்தவர்கள் என்பதில் இன்றும் போற்றுதலுக்குரியவர்கள் என்றால் மிகையாகாது.


ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவரும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. Coved-19ற்கு முன்பே குடும்ப வன்முறைகள் (Domestic Violence) மிகப் பெரிய மனிதவுரிமை மீறலாகவே உள்ளது. கடந்த 12 மாதங்களில் உலகெங்கும் உள்ள 243 மில்லியன் பெண்கள் (14-49வயதுடையவர்) பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை ஐக்கிய நாட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள நோய்தொற்றல் நிலைமையில் பெண்களுக்கான வன்முறைகள் அதிகரிப்பானது நமது மனித இனம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. நோய்த்தொற்றுதலை கட்டுப்படுத்தல் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் ஒவ்வொரு நாட்டின் தேசிய திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதும் நிவர்த்தி செய்வதும் இன்றியமையாத செயற்பாடாக இருத்தல் வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

“ Women as a powerful force at the center of recovery “


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்