இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும்
By - Chandra Nalliah
1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக உலக வர்த்தகத்தை விஸ்தரிக்க விரும்பியே இந்த ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என ஊகிக்கலாம். ஆனால் அது இலங்கையின் அபிவிருத்தியும் முன்னேற்றமும் என்ற வெளித்தோற்றமாகவே சொல்லப்படுகிறது.
சீனா இலங்கையுடன் பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. இவ்வாறு சீனாக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக்கப்பட்ட திட்டங்கள் 1. ஹம்பாந்தோட்ட துறைமுக அபிவிருத்தி ( Hambantota port development project ) 2. ஹம்பாந்தோட்ட சர்வதேச விமான நிலையம் ( Mattala - Hambantota international Airport ) 3. கொழும்பு துறைமுக நகரம் ( Colombo port city ) 4. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை
( Colombo - Katunayaka Expressway project ) 5. Southern Expressway, * Colombo outer circular highway, 6. புத்தளம் நிலக்கரி பவர் ( Puttalam coal power project ) இன்னும் பல நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக சில திட்டங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாமல் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இது அமைச்சரவையால் review committee ( SCARC ) உருவாக்கப்பட்டு அதன்மூலம் அங்கீகரிக்கப்பட்டது எனவும் நம்பப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான சீனாவின் மூலோபாயம் புதிராகவே உள்ளபோதும் நலன்கள் இல்லாமல் முதலீடு செய்வது சாத்தியமற்றதே. உலகலாவிய இணைப்பை மேம்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலம் தனது செல்வாக்கை பலப்படுத்துகிறது எனவும் சொல்லப்படுகிறது.
ஹம்பாந்தோட்ட துறைமுக புதிய ஒப்பந்தமானது 2017இல் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கைசாத்தப்பட்டதாகும். ஹம்பாந்தோட்ட துறைமுக ஒப்பந்தமானது 70% பங்குகள் சீனாவிற்கு வியாபார ரீதியாக CM Port ( Merchants port holding company தlimited ) 99 ஆண்டுகள் 1.12 billion dollar ற்கு குத்தகைக்கு என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட பணமானது துறைமுகத்தை நிர்மாணிக்க பெறப்பட்ட கடனை அடைக்கப் பயன்படவில்லை. இதனால் கடன் மேலும் அதிகரித்தது. இலங்கை Export-import Bank of China ( Exim ), China Harbour Engineering Company ( CHEC ), China Merchant Port Holing ( CMPH ) போன்ற நிறுவனங்களில் இருந்து 2009 - 2019 காலப்பகுதியில் 12.5 billion dollar கடன்களை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் சில கடன்கள் சலுகைக் கடன்களாகவும், வேறுசில கடன்கள் உயர்வட்டியிலும் பெறப்பட்டதாக அறியப்படுகிறது. இது உலகவங்கி வழங்கிய வட்டிவீத்த்திலும் அதிகம் ஆகும். இந்த கடன்களில் பெரும்பகுதி சலுகை (concession ) எனவும் கூறப்படுகிறது. பொதுவாக கடன் என சொல்லும்போது முதல் ( prime ) மட்டுமே குறிப்பிடுவார்கள். முதலும் வட்டியும் சேர்ந்து இன்றைய கடன் தொகை எவ்வளவு என குறிப்பிடுவதில்லை. உலகவங்கியின் அண்ணளவான கணிப்பீட்டின் படி இலங்கை சீனாவின் கடன்களை அடைக்க 36 billion dollar வரை தேவைப்படலாம் என கூறுகிறது. இது 2018 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP ) 40 percent ஆக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் 2017 இல் கைச்சாத்திடப்பட்ட புதிய 99 வருட குத்தகை ஒப்பந்தமானது மேலும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
Southern Expressway ——- 1,545 million dollar ( lone 4 ) ——- 2% interest
Outer circular Highway ——- 494 Million dollar. ——- 2% interest
Colombo Karnataka ——— 248. Million dollar. ——-- 6.3% interest
Hambantota Air port ——- 190 Million dollar. ——— 2% interest
Hambantota port. ——— 1,336 Million dollar ( lone 3 ) ——— 2- 6.5% interest
CICT Colombo. ———- 500. Million dollar. ———- N/A
Terminal
Puttalam power plant ———- 1,346. Million dollar ( lone 3 ) ——— 2% interest
Colombo Port City. ———- 1,300 Million dollar. ———- N/A
Lotus Tower. ———— 88 Million dollar. ———-
சீனாவின் “பட்டுச்சாலை” Maritime Silk Road ( MSR ) என்பது ஆசியா, இந்துசமுத்திரம், கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் உள்கட்டமைப்பு இணைப்பை அதிகரிப்பதன் மூலோபாயமாக 2013 இல் 21ம் நூற்றாண்டின் கடல் பட்டுச்சாலை என்ற கருத்தை வெளியிட்டது. One Belt One Road என்பது சீன மக்கள் குடியரசின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார மூலோபாயம் எனலாம். இதன் உறுதியான திட்டங்கள் 2015 இல் வெளியிடப்பட்டது . சீனாவின் Belt and Road Initiative ( BRI ) கொள்கையானது ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பாவை பொருளாதார நோக்குடன் இணைப்பை ஏற்படுத்துவதாகும். கடல்களில் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் திறமையான போக்குவரத்து பாதைகளை உருவாக்கும் முயற்சியுமாகும்.இம் முயற்சியின் மூலம் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதாக கூறப்படுகிறது. BRl என்பது சீனா தனது குறிக்கோளை அடைவதற்கான வாகனம் எனலாம். இதன் மூலம் பல நூறு billion அமெரிக்கன் டொலர்களை முதலீடு செய்கிறது. சீனாவை உலகலாவிய சக்தியாக நிலைதிறுத்துவதாகும். இதற்கு சீன நிறுவனங்களும்,வங்கிகளும் சேர்ந்து திட்டங்கள் வாயிலாக துறைமுகங்கள், சாலைகள், இரயில் பாதைகள், மின்உற்பத்தி நிலையங்கள், அணைகள் போன்றவற்றை உள்நாட்டில் கட்டியெழுப்புவதாகும்.
சீனா இந்த திட்டத்தில் 70 ற்கு மேற்பட்ட நாடுகளில் 700 ற்கு மேற்பட்ட திட்டங்களை ( projects ) நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் கொண்டுள்ளது. BRI என்பது வெளிஉலகத்துடனான சீனாவின் தொடர்புகளுக்கு சீன நலன்களை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச பொருளாதார கட்டமைப்புகளை மறுவடிவமைக்கும் முயற்சியாகும். ஆனால் இத்திட்டத்தினை கூட்டு முயற்சியில் வறுமை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உதவி வழங்குதல் என அலங்கார வார்த்தைகளினால் கூறப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு உள் கட்டமைப்பு நிதியை வழங்கும் அதேவேளை பலரை கடனை கட்டமுடியாத நெருக்கடி நிலையை ஏற்படுத்துகிறது எனவும் அறியப்படுகிறது. சீனாவின் திட்டங்களுக்கு பின்னால் பொருளாதார புவிசார் அரசியல் நோக்கங்களே குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகிறது.
இலங்கை முன்னால் ஜனாதிபதி ராஜபக்ச அவரது சொந்த நகரமான ஹம்பாந்தோட்ட இல் பல திட்டங்களை அபிவிருத்தி செய்வதனை Elephant projects என அழைத்தனர். அவை ஹம்பாந்தோட்ட துறைமுகம், புதிய விமான நிலையம், மாநாட்டு மையம் (convention centre), கிரிக்கெட் அரங்கம் போன்றவற்றை குறிப்பதாகும். இலங்கையின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஹம்பாந்தோட்ட துறைமுகமாகும். முதலாவது பெரிய துறைமுகம் கொழும்பு துறைமுகமாகும்.. 2016 இல் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் பெறப்பட்ட வருமானம் 11.81 US $ million ஆகும். செலவாக 10 US $ million இருந்தது. இலாபமாக 1.81 US $ million பெறப்பட்டது. இது எதிர்பார்த்த இலாபத்தை விட மிகக் குறைவாகும். Hambatota port ஆனது அதிக நஷ்டம் heaved losse ஆக இருந்தமையால் சீனாவின் கடனை செலுத்த முடியவில்லை. அந்த கடனுக்கு பதிலாக குத்தகைக்கு விட முன்மொழியப்பட்டது. அதன்படி 2017 இல் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது . இந்த 99 வருடம் என்பது கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளை உள்ளடக்கியது எனலாம்.
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு நீண்டகாலமாக இணக்கமாகவே இருந்துள்ளது. சீனப்புரட்சிக்கு பின்னர் மாவோவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் அங்கீகரித்தது. 3 - 4 தசாப்தங்களாக நடந்த உள்நாட்டு யுத்தம் ஆனது சீனாவின் உறவை மேலும் இன்றியமையாததாக மாற்றியது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டபோது 2005 இல் இலங்கையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ராஜபக்ச தலைமையில் இலங்கையிற்கான பொருளாதார ஆதரவு, இராணுவ உபகரணங்களுக்காக சீனாவை பெரிதும் நம்பியது. எனவே இலங்கை அரசாங்கம் சீனாவிடம் உதவிக்கரம் நீட்டியது எனலாம்.
சீனாவும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களும் நிதி உதவி தேவைப்படும் வறுமை நாடுகளில் தங்கள் நலன்களை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உலகலாவிய முதலீடு, கடன் வழங்கும் திட்டம் உலகெங்கும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளுக்கு கடன்பொறிக்கு சமமானது. சீன அரசாங்கம் Billion கணக்கான Dollar களை கடனாக கொடுக்கிறது. அத்தோடு திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அனைத்து பொருட்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் சீனாவில் இருந்தே கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் சீனா பெரும் இலாபத்தையும் ஈட்டுகிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இங்கு இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது பற்றி கேள்வி எழுந்தபோது அவர்களிடம் Skill இல்லை என தட்டிக்கழிப்பதையும் காணலாம்.
இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு port city ஆகும். Port city project ஆனது 16 September 2014 இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்னும் சில காலங்களில் வானலாவிய கட்டிடங்களையும், மருத்துவமனைகளையும், ஹொட்டல்களையும் கொண்ட நவீன பெருநகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது சீன நிறுவனத்தின் Belt and road திட்டத்தில் உருவாகும் 21ம் நூற்றாண்டின் பட்டுச்சாலை ( Silk Road ) என அழைக்கப் படுகிறது. இங்கு சாலைகள் பாலங்கள் ரயில்வே எல்லாமே belt ஆக முழுப்பகுதியையும் road of shipping lanes ஆக உள்ளது. பெருங்கடலில் இருந்து மீட்கப்படும் 665 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் இந்த நகரமானது சிங்கப்பூர் போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனை கடலில் இருந்து எழுந்த அடுத்த டுபாய் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவடைய 2041 வரை செல்லும் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு Chinese engineering firms, China communication construction company ( cccc )கடன்களை வழங்குகின்றன.
இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மின்உற்பத்தி நிலையம் ( Norocholai power station ) என்ற திட்டமானது Exim வங்கியின்1.4 billion dollar செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இங்கு காபன் துகள்கள், மேக்கூரி ( Hg ), சல்பர்டைஒட்சைட், நைதரசன் சேர்வை போன்றவை வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இவை காற்றை மாசுபடுத்துவதுடன் சுற்றுச்சூழல், நீர், மண், போன்றவற்றையும் சென்றடைகின்றது. இவ் மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்யும்போது அவை கடலினுள்ளும் விழுகிறது. அருகில் உள்ள குடியிருப்புகளின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடியது. நீண்ட காலத்தில் மனிதர்கள், விலங்குகளில் நோய்களை உருவாக்குவதுடன் பயிர்செய்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இங்கு வெளியேறும் மேக்கூரி மனிதர்களின் உடலில் குறித்தளவிற்கு மேல் சென்றடையுமெனில் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் நங்கூரமிடும் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனகழிவுகள், எண்ணெய் போன்றவையும் கடலை மாசுபடுத்தி கடல் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். கொழும்பு port city ஆனது நீண்ட காலத்தில் கடலின் சுற்றுச்சூழலில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தை மீட்பதற்கான மணல் அகழ்வானது sand mining for the land reclamation ) கடற்கரை மற்றும் கடல்வாழ் உயிரினங்களை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது. மீனவர்கள் மீன்களை பிடிப்பதற்கு தொலைதூரம் செல்ல வேண்டி ஏற்படும். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் இந்த port city கட்டுமானமானது கடல் அரிப்பை ( sea erosion ) ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
சீனநிறுவனங்களும், வங்கிகளும் சேர்ந்து BRI கொள்கையினூடாக திட்டங்களை முதன்மைப்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்திருப்பது குறித்து நாம் நோக்குகையில் இதில் இலங்கையிற்கான நலனா? சீனாவிற்கான நலனா? என்பது கேள்வியுடனே உள்ளது. வளர்ந்துவரும் நாடு மிகப் பெரிய கடன்களை பெறுவதும், அதனை குறித்த நேரத்தில் அடைக்க முடியாமல் போவதும் பின்னர் மீண்டும் மீண்டும் பல ஒப்பந்தங்களை உருவாக்குவதும் இலங்கை நெருக்கடியான பொருளாதார சூழலினுள் மூழ்கிறது என்றே அர்த்தம் கொள்ளலாம். திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருதரப்பினரும் நலன்களை கொண்டிருப்பார்கள் என்பது உறுதியானது. ஆனால் இங்கு நாட்டு நலன், மக்கள்நலன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தலைமுறையாக வாழ்ந்த இடங்களை விட்டு மக்கள் இடம்பெயர்தல், மக்களில் ஒரு பகுதியினர் தமது தொழிலுக்கான வாழ்வாதாரத்தை இழத்தல், பயிர்ச்செய்கைக்கான நிலங்கள் பறிபோதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அச்சத்தை உருவாக்குதல் போன்ற பல பிரச்சனைகள் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை சீனாவிற்கான குறித்த கடனை உரிய நேரத்தில் அடைக்க தவறியதால் ஹம்பாந்தோட்டை புதிய ஒப்பந்தமாகவே 99 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எனில் இலங்கை நீண்டகாலத்தில் சீனாவின் கைப்பொம்மை ஆகிவிடுமா என்ற அச்சம் வரவே செய்கிறது.
சீனா இலங்கையுடனான இந்த ஒப்பந்தங்கள் பெருமளவில் சீன நலன்களையே முதன்மையாக கொண்டுள்ளது என்றபோதிலும் அது இலங்கையின் உள்நாட்டு அபிவிருத்தியும் சீனாவின் உதவியும் என்ற மாயைத்தோற்றத்தையே கொடுக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பாதகமான விளைவுகள் மட்டுமல்ல சாதகமான விளைவுகளும் இருக்கவே செய்கிறது. நீண்ட காலத்தில் இத்திட்டங்களினால் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்தே கேள்விகள் எழுகின்றது. அது சாதகத்தை விட பல மடங்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதில் இலங்கை மக்கள் அனைவருக்கும் உள்ள அச்சம் நியாயமானதே. எனினும் இதில் பங்கு கொள்ளும் இலங்கை அரசும் அதன் பணக்கார ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினரும்,சீன அரசும் அதன் நிறுவனங்களும் வங்கிகளும் தற்போது இலாபம் ஈட்டுவதை யாராலும் மறுத்துவிடமுடியாது.
Colombo port City
Puttalam coal power plant
Hambantota port
************************************************
கருத்துகள்
கருத்துரையிடுக