பெண் என்னும்.....


ஊர் 

உறங்கிக்கொண்டிருந்த

ஒரு இரவில்

அனந்தலற்று

புரண்டு படுக்கிறாள்


சுடலைகுருவி ஒன்று

வீட்டின் மேலாய்

கீச்சிட்டு செல்கிறது.....


முந்தநாள்  தந்தை

இறந்து கிடக்கிறார்

அவள்

கதறியழுகிறாள்

கண்திறந்து பார்க்கிறார்

அப்பா கனவில்.....


எல்லாமே எல்லாமே

மனதைக் குடைகிறது

அடுத்த நாளுக்கான

சேவைப்பொழுது

விரைந்து வருகிறது......


மணமாகி 

இரு திங்கள்தான்

உண்டாகி விட்டாயா

என தொடுக்கும் கேள்வி

எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது.....


ஏவாளின் கையில்

அப்பிள் போல்

பொருளாகிப்போன மணவாழ்க்கை

பொருளற்று போகிறது.......


பெண் என்ற படைப்பு

இன்னும் எத்தனை காலம்

விடியலுக்காய் காத்திருப்பதோ.....





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்