நீதி
மறுக்கப்பட்டவர்கள்
நாங்கள்
பறத்தலை
வேண்டி நிற்கும்
உருமாற்றம் காணாத
கூட்(ண்)டு புழுக்களே
நாங்கள்....
நாங்கள் பெண்களாக
பிறப்பெடுக்க வில்லை
சிலைகளாக
உருவமைக்கப்பட்டோம்
சித்தாந்தம்
பழுத்தகனி
தொடுத்தவர்க்கு-ஆனால்
விழுந்திருப்பது பெண்களுமே
இரவல் விழிகளில்
இருட்டில் நீ
இருந்த காலம்
தொலைந்து போகும்
விரைந்து வா
பெண்ணே
முகர்ந்து பார்
சுதந்திரக் காற்றை
நீதி
மறுக்கப்பட்டவர்கள்
நாங்கள்......
கருத்துகள்
கருத்துரையிடுக