நேற்றிரவு தூறலாக தொடங்கிய மழை தொடர்ந்து அடித்து பொழிந்தது.... யனனலை திறந்து திரையை விலக்கியபோது குழந்தையொன்று காகித கப்பல் செய்து ஓடும் நீரில் விட்டு மகிழ்கிறது...... குழந்தையாய் என்றும் இருந்திருந்தால் குழப்பம் என்றும் இல்லையோ என்று மனம் தேம்புகிறது.... மூன்று நாட்கள் முன்பு உறவுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்த ஒருநாளில் அவளை மலடி என ஓரங்கட்டியது தேம்பியழும் குழந்தையாக்கிறது..... பெண்குறியில் விழுந்த விந்துக்கள் விருத்தியற்றிருந்தாலும் சூலகமே சூனியக்காரியாகிறது.... ஒரு மனிதனுக்கு இரண்டு நீதிகள்.......
இடுகைகள்
ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண் என்னும்..... ஊர் உறங்கிக்கொண்டிருந்த ஒரு இரவில் அனந்தலற்று புரண்டு படுக்கிறாள் சுடலைகுருவி ஒன்று வீட்டின் மேலாய் கீச்சிட்டு செல்கிறது..... முந்தநாள் தந்தை இறந்து கிடக்கிறார் அவள் கதறியழுகிறாள் கண்திறந்து பார்க்கிறார் அப்பா கனவில்..... எல்லாமே எல்லாமே மனதைக் குடைகிறது அடுத்த நாளுக்கான சேவைப்பொழுது விரைந்து வருகிறது...... மணமாகி இரு திங்கள்தான் உண்டாகி விட்டாயா என தொடுக்கும் கேள்வி எரிச்சலூட்டுவதாய் இருக்கிறது..... ஏவாளின் கையில் அப்பிள் போல் பொருளாகிப்போன மணவாழ்க்கை பொருளற்று போகிறது....... பெண் என்ற படைப்பு இன்னும் எத்தனை காலம் விடியலுக்காய் காத்திருப்பதோ.....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருமணம்.... இருமனம் ஒருமனமாவது திருமணம் என்கின்றாள் அம்மா.... செல்லாமாய் வளர்த்த கிளியை இறக்கை வெட்டி பறக்க விடுவது என்கின்றார் அப்பா.... அடங்காத சுதந்திர காற்றை கட்டுக்குள் போட்டு அடங்க வைப்பது என்கின்றார் அண்ணா... நித்தியத்தில் இவர்கள் இப்படித்தான் கனவுகளை நிரப்பிக்கொண்டிருக்கையில் அவள் செப்புகிறாள் பெட்டியை கழட்டி விடும் புகைவண்டி போல் காதலித்தவளை கழட்டிவிட்டவனும் காசுக்காக மட்டுமல்ல சேர்ந்து வாழ்ந்துவிட்டு கெளரவத்திற்காக நம்பவைத்து தொலைந்தவனும் முற்போக்கு முகமூடியை அணிந்தவனும் ஆணாதிக்க அதிகாரத்தை அரவணைத்தவனும் என் நிராகரிப்ப வரிசையில் நீண்டிருக்கையில்...... உங்கள் வரையறைகளை தாண்டி எங்கேயாவது தேடிப்பாருங்கள் மனிதியை மதிக்கும் மானிடனை கண்டுபிடித்தால் கொண்டுவாருங்கள் நான் அச்சமின்றி அச்சமின்றி ஆமோதிப்பதை பரிசீலனை செய்கிறேன்..... ப
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மாற்றங்கள் மாற்றங்கள் மறுபிறப்பெடுக்கின்றன மறுப்பவை மீண்டும் மர்ணிக்கின்றன சித்தாந்தத்தால் சிறகு உடைக்கப்பட்டவள் ஏவாள் அதனால்தானே அவள் உடலும் உறுப்பும் போகமாய் இன்னும் மறுபிறப்பெடுத்த ஏவாள் மறுதளித்தாள் நான் மனிதன் என சேத்துப் பன்னி ஒன்னு சேறடிப்பதாய் எண்ணி மார்புக்கச்சை பற்றி பேசி மீண்டும் மர்ணிக்கிறது ஏவாள் உரத்துச் சொன்னாள் எனது உடல் எனது உடை என