இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  அழுத்தும் புதுவரவு.....பேபி புளு தாய்மை அவளது எல்லா எதிர்பார்ப்புகளும் நொருங்கிப்போன ஒருநாள்.... பாலுக்காக வீரிட்டு அழும்  குழந்தையை அவள் தேள் கொட்டியவளாய் திகைத்து நோக்குகிறாள்..... அவள் தாய்மையின் சுமை தலையில் கணக்க தடுமாற்றம் கொண்டு சமநிலை தவறி கீழே கீழே ஏகுகிறாள்.... உறக்கம் தொலைந்துபோக நாட்காட்டி நலிந்துபோக ஒத்தாசையற்றுப்போக ஈஸ்திரோஜன், புரோதெஸ்ரோன் தைரொட் இன்னும்பிற இறங்கிப்போக இவளுடலின் தலை சுற்றுச் சுழல்கிறது....... வேண்டாத ஒன்று கழுத்தை தெரிப்பதாக வாழ்க்கை கசப்பதாக வன்முறையில் வழிதேட ஏவலாகிறாள்..... விஞ்ஞானத்தின் விபரீதத்தை புரிந்துகொள்ளா உள்ளங்கள் சரமாரியாக வசவுகளை பொழிகின்றன....